தமிழகத்தில் 17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி 17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனங்களை மகிழ வைக்க 10 முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், அனுபவம் பகிர்தல் போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில்  தொடர்மழை காரணமாக இன்று பல்வேறு  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்

தொடர் மழை காரணமாக   பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்ட விபரங்கள் 

  • கள்ளக்குறிச்சி, 
  • விழுப்புரம்,
  •  நெல்லை
  • கடலூர்
  • திருவாரூர்
  • வேலூர்