Incentive For Higher Education Go No 120 Date 01.11.2021
அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக் காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020 ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதியின் மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, உயர் கல்வித் தருதிகளுக்கான ஊக்கத் தொகை, ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் என 7.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில், விதி 110-இன் படி முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டார்
Incentive For Higher Education Go No 120 Date 01.11.2021
தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதில் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை மதிப்பு மற்றும் அதற்கான வழிகாட்டு முறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- முனைவர் (Ph.D)படிப்பு –ரூ 25000
- பட்ட மேற்படிப்பு (PG) அல்லது அதற்கு சம்மானது – ரூ 20000
- பட்டப்படிப்பு /பட்டியபடிப்பு –ரூ 10000
வழிகாட்டு நெறிமுறைகள் :
🔘ஒரு பதவியின் பணிநியமன விதிகளின்படி, அப்பதவியில் பணியமர்த்தலுக்கு கட்டாய / விருப்பத் தகுதியாக (essential or desirable qualification) நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளுக்கு இவ்வூக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது.
🔘கல்வி சார் அல்லது இலக்கியம் சார்ந்த பாடப்பிரிவுகளில் (Academic or Literary subject) பெறப்படும் உயர் கல்வித் தகுதிக்கு இவ்ஷக்கத் தொகை அனுமதிக்கப்பட மாட்டாது.
🔘இருப்பிணும், இக்கூடுதல் கல்வித் தகுதியானது, சம்பந்தப்பட்ட நபர்கள் பணிபுரியும் பதவிகளுக்குரிய பணிகளுக்கோ அல்லது அடுத்த உயர் பதவிக்கான பணிகளை ஆற்றுவதற்கோ நேரடித் தொடர்புடையதாக ஒருந்தால் இவ்வூக்கத் தொகை அனுமதிக்கலாம். அரசுப் பணியாளரின் பணித் திறனை மேம்படுத்தும் வகையில் அக்கல்வித் தகுதியின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
🔘துறை / பதவி நிலை , வகைப்பாட்டினை பொருட்படுத்தாமல், அனைத்து பதவிகளுக்கும் இவ்வக்கத் தொகையின் அளவு ஒரே மாதிரியாக (uniform) இருக்க வேண்டும்.
🔘அரசு பணியாளர் ஒருவர் கூடுதல் கல்வித் தகுதி பெறுவதற்கு அரசால் அணுப்பப்பட்டிருந்தாலோ அல்லது கல்வி விடுப்பைப் பயன்படுத்தி கூடுதல் கல்வித் தருதி அடைந்திருந்தாலோ இவ்வூக்க த்தொகை அனுமதிக்கப்படமாட்டாது.
🔘அரசுப் பணியாளர் ஒருவர், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே இவ்வூக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.
🔘ஒரு பதவிக்கு பணியமர்த்தப்படுவதற்குத் தேவையான கல்வித் தகுதியினை தளர்த்தி பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு இவ்ஷக்கத் தொகை அணுமதிக்கப்படமாட்டாது. மேலும், தேவையான அக்கல்வித் தகுதியை பின்னாளில் பெற்றிருந்தாலும் இவ்வூக்கத் தொகை அனுமதிக்கப்படமாட்டாது
🔘இவ்வூக்கத் தொகை பெறுவதற்கான கல்வி, பல்கலைக் கழக மானியக் குழுவாலோ, ஓன்றியமாநில அரசு அல்லது அரசால் அமைக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளான அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் சூழுமம் [AICTE), அகில இந்திய மருத்துவக் குழு [Medical Council India] போன்றவற்றாலோ அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
🔘இவ்வூக்கத் தொகையானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கடைவெளியில், அரசுப் பணியாளரின் பணிக்காலத்தில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
🔘ஓர் அரசுப் பணியாளர் கூடுதல் கல்வித் தகுதி பெற்ற ஆறு மாத காலத்திற்குள் ஒவ்வூக்கத் தொகை பெற உரிமை கோர வேண்டும்.
🔘10.03.2021 அன்று அல்லது அதற்கு பிறகு கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு இவ்வூக்கத் தொகையானது அனுமதிக்கப்பட வேண்டும்
🔘10.03.2021 அன்றிலிருந்து இவ்வாணை வெளியிடப்படும் நாளது வரை கூடுதல் கல்வித் தகுதி பெற்ற அரசுப் பணியாசார்கள் இவ்வூக்கத் தொகை பெற, இவ்வாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் உரிமை கோர வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..