BEO Transfer Counselling  


29.12.2021 அன்று   நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வின் சுருக்கம் (Abstract) வெளியீடு


BEO After Transfer Counselling Abstract


Revised BEO Transfer counseling date.



BEO Seniority List


Revised BEO Transfer counseling date.


BEO Transfer Counselling 2021-22

2021-2022 ஆம்‌ கல்வி ஆண்டு - தற்போதைய ஒன்றியத்தில்‌ 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரியும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு மாறுதல்‌ கலந்தாய்வு நடத்துதல்‌ - வழிகாட்டுதல்கள்‌ வெளியிடப்பட்டுள்ளது

அனைத்து மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்  BEO Vacancy List காலிப் பணியிட விவரம் 

BEO Vacancy List  District Wise  In Pdf 

2021 - 2022 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ . கலந்தாய்வு வழிகாட்டுதல்கள்‌ கீழ்‌ குறித்தவாறு வெளியிடப்பட்டுள்ளது.

   DEE - BEO Transfer Counselling 2021-22 Instructions And Application Form 


1 தற்போது பணிபுரியும்‌ ஒன்றியங்களில்‌ 30.112021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரியும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ கட்டாயமாக பொதுமாறுதல்‌ கலந்தாய்வில்‌ கலந்துகொள்ள வேண்டும்‌.

2. 30.112021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகள்‌. பணிமுடிக்காதவர்களும்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ மாறுதல்‌ கலந்தாய்வில்‌ கலந்துக்கொள்ளலாம்‌,

3. 2021 - 2022 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ ஒய்வு பெறும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ தற்போதைய ஒன்றியத்தில்‌ 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரிந்திருந்தாலும்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வில்‌ கலந்துக்கொள்வதிலிரர்து விலக்கு அளிக்கப்படுகிறது.

4. வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு முதலில்‌ மாவட்டத்திற்குள்ளான மாறுதல்‌ கலந்தாய்வும்‌ பின்னர்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ மாறுதல்‌ கலந்தாய்வும்‌ நடைபெறும்‌. 

5. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ பணியிலிருந்து பணிமாறுதல்‌ /பதவி உயர்வு மூலம்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களாக நியமனம்‌ பெற்றவர்கள்‌. தாங்கள்‌ கடைசியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்த ஒன்றியத்தை மாறுதல்‌ கலந்தாய்வில்‌ தேர்வு செய்தல்‌ கூடாது.

6. மாறுதல்‌ கலந்தாய்வில்‌ கலந்துக்கொள்ளும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ தற்போது பணிபுரியும்‌ ஒன்றியத்தை மாறுதல்‌ கலந்தாய்வில்‌ மீளவும்‌ தேர்வு செய்யக்கூடாது.

7.மாறுதல்‌ கலந்தாய்வில்‌ கலந்துக்கொண்டவர்களின்‌. முன்னுரிமை அவர்கள்‌ முதன்‌ முதலில்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவியில்‌ பணியில்‌ சேர்ந்த தேதியின்‌ அடிப்படையிலும் நிர்ணயம்‌ செய்யப்படும்‌. வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவியில்‌ பணியில்‌ சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கும்‌ பட்சத்தில்‌ அவர்கள்‌ தற்போது பணிபுரியும்‌ ஒன்றியத்தில்‌ பணியில்‌ சேர்ந்த தேதியின்‌ அடிப்படையில்‌ முன்னுரிமை நிர்ணயம்‌ செய்யப்படும்‌.