DA Increased 17 % to 31 % From Jan 2022


ALLOWANCES - Dearness Allowance - Enhanced Rate of DearnessAllowance from 1st January 2022 - Orders - Issued.

G.O.Ms.No.3, Dated: 1 st January 2022.


●The enhanced rate of Dearness Allowance payable under these orders shall be paid in cash with effect from 01-01-2022. Dearness Allowance for the period from 01-01-2020 to 31-12-2021 shall be paid at the rates of 17% continuously

The Payment of Dearness Allowance for the month of January, 2022 shall be drawn and disbursed by existing cashless mode of Electronic Clearance System (ECS). 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்கள்‌, ஆசிரியர்கள்‌, அகவிலைப்படி பெறத்‌ தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1- 2022 முதல்‌ அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்‌ என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌ விதி 110-ன்கீழ்‌ அறிவித்தார்கள்‌.

அந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்கள்‌, ஆசிரியர்கள்‌, அகவிலைப்படி பெறத்‌ தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்கள்‌ / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படியினை 14 சதவிகிதம்‌ உயர்த்தி, 1-1- 2022 முதல்‌ 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.