Tamilnadu Government Allowance Pongal Bouns-2022 



2020-21.ஆம்‌ கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம்‌ ) சிறப்பு தற்காலிக மிகை
ஊதியம்‌ வழங்குதல்‌ - ஒப்பளிப்பு ஆணை - வெளியிடப்படுகிறது.அரசாணை நிலை) எண்‌1, நாள்‌: 01.01.2022.

GO Ms No1  Pongal Bonus - Tamil Pdf Date :01.01.2021


முறையான காலமுறைச்‌ சம்பளம்‌ பெறும்‌ அனைத்து “C” மற்றும்‌ “D பிரிவு
அரசுப்‌ பணியாளர்கள்‌, உள்ளாட்சி மன்றப்‌ பணியாளர்கள்‌, அரசின்‌ மானியம்‌ பெறும்‌
கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ காலமுறைச்‌ சம்பளம்‌ பெறும்‌ ஆசிரியர்கள்‌ 7
பணியாளர்கள்‌ ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள்‌ என்ற அடிப்படையில்‌,
ரூ.3,000 என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2020-2021-ம்‌ கணக்காண்டிற்கு தற்காலிக
மிகை ஊதியம்‌ மற்றும்‌ சில்லறை செலவினத்தின்‌ கீழ்‌ மாத அடிப்படையில்‌
நிலையான ஊதியம்‌ பெற்று வந்த முழு நேர மற்றும்‌ பகுதி நேரப்‌ பணியாளர்களுக்கும்‌
மற்றும்‌ சிறப்பு காலமுறை ஊதியம்‌ பெறும்‌ பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை
ஊதியம்‌ ரூ1000- பொங்கல்‌ பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு
முடிவெடுத்துள்ளது.

பொங்கல்‌ பரிசாக C மற்றும்‌ “D” பிரிவுப்‌ பணியாளர்களுக்கு ரூபாய்‌ 3 ஆயிரமும்‌, ஒய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய்‌ வழங்கிடவும்‌, சிறப்பு காலமுறை ஊதியத்தில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு பொங்கல்‌ பரிசாக 1000 ரூபாயும்‌, முன்னாள்‌ கிராம நிருவாக அலுவலர்கள்‌ உள்ளிட்ட சறப்பு காலமுறை ஊதியத்தில்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம்‌ பெறும்‌ ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும்‌ வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌. இதன்‌ காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய்‌ அளவிற்கு செலவினம்‌ ஏற்படும்‌.

தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச்‌ சூழ்நிலையிலும்‌, அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களின்‌ நலன்‌ கருதி, அகவிலைப்‌ படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும்‌, “C” மற்றும்‌ “D” பிரிவுப்‌ பணியாளர்களுக்கு பொங்கல்‌ பரிசு வழங்கிடவும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.