High School HM Panel And Vacancy 


2019ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்து வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் 


HSS HM Seniority.As On 15.06.2022 -Download 



01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

CSE High School HM Panel Preparation Instruction  Date :17.02.2022


S.NO 1 to 991  School HM Panel  As On 01.01.2022 Pdf 


---------------------------------------------------------------------------

07.02.2022 (High school HM promotion) கலந்தாய்வு நிலவரம்:

மொத்த காலிப் பணியிடங்கள்: 411

பேனலில் உள்ளோர் (பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி) :482 மற்றும் BEO'S

கலந்தாய்வு நிறைவு. 

பதவி உயர்வு  பெற்றவர்கள்: 264 (PG AND BT: 255 ,BEO:9)


பதவி உயர்வு துறந்தவர்கள்: 218

கலந்தாய்வு முடிவில்  காலியிடமாக உள்ள உயர் நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 151

பதவி உயர்வு / பணிமாறுதல்‌ மூலம்‌ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாகிரியர்‌ பதவிக்கு பணி இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கும்‌ கலந்தாய்வு 07.02.2021 அன்று காலை 9.00 மணிக்குநடைபெறவுள்ளதால்‌ இக்கலந்தாய்வில்‌, பெயர்ப்பட்டியல்‌ உள்ள தங்கள்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த ஆசிரியர்கள்‌ 1 மணிநேரம்‌ முன்னதாக கலந்தாய்வு நடைபெறும்‌ இடத்திற்கு தவறாமல்‌ கலந்து கொள்ளும்‌ வகையில்‌ தகவல்‌ தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌


CoSE Proceeding  Date 04.02.2022- HS HM PROMOTION Counselling


HS HM Promotion Panel as on (01.01.2021) Final List Released by CoSE!!!



Resultant HS HM Vacancy after 03.02.2022 Counselling.


HS HM Vacancy  Resultant  Vacancy after 03.02.2022


இன்று (02.02.2022) நடைபெற்று முடிந்த அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு!!

High School HM Vacancy After with in District Counselling 

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 345.


345 High School HM Vacancy  List In Pdf 


01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு -தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோருதல் -பள்ளிக் கல்வி இணை இயக்குனர் 

High School HM Panel Instruction  Date:24.12.2021


Panel List Serial No 1 To 1050

 DSE Panal List Pdf Download 


2021-22-ஆம் கல்வியாண்டில் 01.01.2022 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு/பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப் பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


 1.அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக ஏற்கனவே பணி நியமனம் வழங்கப்பட்டு அதனைத் தற்காலிகமாக மூன்று ஆண்டுகளுக்கு உரிமைவிடல் செய்தவர்களுள், தற்காலிக உரிமைவிடல் செய்த நாளிலிருந்து 31.12.2020 அன்று  மூன்று ஆண்டு காலம் முடித்தவர்கள்.

2.1985-86ஆம் ஆண்டு வரை  அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள். 

3.தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்படாமல், வேலைவாய்ப்பகம் மூலம் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டு, அரசாணை எண் 1325 நாள் 03.08.88-ன் படியும்,  மற்றும் இப்பொருள் சார்ந்த அரசாணைகள் 125, 367, 390  ஆகியவற்றின் மூலம் முன்தேதியிட்டு பணிவரன்முறைப்படுத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் / மொழியாசிரியர்கள்.

4.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக (மொழி ஆசிரியர்கள் உட்பட) 2001-2002ஆம் ஆண்டு வரை தெரிவு செய்யப்பட்டு, 31.12.2002க்குள் நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.

5.பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் தரத்தில் 31.12.2002 வரையில் நியமனம் பெற்று பணியாற்றிவரும் ஆசிரியர்கள்.

6.அரசுப் பள்ளிகளில் 31.12.2002 வரையில் பதவி உயர்வு மூலம் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் பட்டதாரி தமிழாசிரியர்களுள் பி.எட் 31.12.2020க்குள் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 

7.II மற்றும் உடற்கல்வி இயக்குநர்  நிலை II இருந்து உடற்கல்வி இயக்குநர்  நிலை I ஆக நியமனம் பெற்றவர்களில் 31.12.2020க்குள் பி.ட்டி/பி.எட் பட்டம் பெற்றவர்கள். (முன்னுரிமையானது பணி விதிகளின்படி  அமையும்)

8.மாநகராட்சி / வேறு துறைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலிருந்து அலகு விட்டு அலகு மாறுதலில் வந்தவர்கள் / ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில்  பணியில் 31.12.2002 வரை பணியில் சேர்ந்தவர்கள் அதற்கான உரிய  ஆவணம் அல்லது உரிய பதிவுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

9.மேற்கண்ட வகை பட்டதாரி ஆசிரியர்களில், தற்போது முதுகலை ஆசிரியராகப் பணிமாறுதலில் பதவி உயர்வு பெற்றுப் பணிபுரிந்து வருபவர்கள்.

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பணிமாறுதல் பதவி உயர்வு அளித்து நியமனம் செய்யப் பரிந்துரை செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்க்குறிப்பிட்ட தேர்வுகளில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அ) நிருவாக அலுவலருக்கான கணக்குத் தேர்வு (அல்லது) சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் –I(Account test for Executive Officer (Or ) Account test for Subordinate officers part1)


ஆ) மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வு (தற்போது தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் தேர்வு) .(Tamil Nadu Government Office Manual Test)