இரண்டு திருப்புதல் தேர்வுக்கு பதில் ஒரு திருப்புதல் தேர்வு – அமைச்சர் 


தமிழகத்தில் கொரோனா  பரவி வருவதால் 1 முதல் 9  வகுப்பு வரை பள்ளிக்கள் முதலில் மூடபட்டது  . கொரோனா பாதிப்பு அதிகமாததால் மாணவர்களுக்கு தடுப்பூசி போடபட்டது. ஜனவரி 19 முதல் திருப்புதல் தேர்வு தொடங்க இருந்த நிலையில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக   10 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

"10, 11, 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் இரண்டு திருப்புதல் தேர்வுக்கு பதிலாக  ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும் எனவும் . பொது தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது" எனத் தெரிவித்தார்.