Tnpsc Introduced E- Bulletin For Department Exam
DSE Proceeding For Department Exam E- Bulletin Date :19.01.2022
அரசுப் பணியாளர்களின் துறைத்தேர்வு முடிவுகள் இனி E-Bulletin மூலமாகவே வெளியிடப்படும்
மே-2021 ல் நடத்தப்பட்ட துறைத்தேர்வு முடிவுகள் குறித்து அரசிதழ் e -Bulletin வாயிலாக தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும், இனி தமிழ்நாடு தேர்வாணைய துறைத்தேர்வு முடிவு வெளியீடுகளை (அரசிதழ்) அச்சிட்டு வெளியிடுவது என்பது கைவிடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இணையதள வெளியீட்டினை ஆதாரமாக (authantecated Documents) கொண்டு தகுதிகாண் பருவம் விளம்புதல், பதவி உயர்வுகள் போன்றவற்றை பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக, தேர்வாணைய இணையதள வெளியீட்டு முடிவுகளை E-Bulletin அங்கீகரிக்கப்பட்ட ஆதாரமாக ((authantecated Documents)) கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பதிவேட்டில் துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் குறித்து பதிவுகள் மேற்கொள்ள தற்போது பெயர் / தகப்பனார் பெயர் / பிறந்ததேதி / முகவரி / பதிவெண் ஆகிய அனைத்து விவரங்களுடன் அரசிதழ் ( e-Bulletin ) ஒருங்கே வெளியிடப்படுவதால் தேர்வாணைய நுழைவுச் சீட்டு கோரி பணியாளர்களை வற்புறுத்தக் கூடாது என்றும், நுழைவுச் சீட்டு இருப்பின் அதனை பரிசீலனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர்கள் தாயலகு மாவட்டத்தை தவிர்த்து இதர காரணங்களுக்காக பிற மாவட்டங்களில் துறைத்தேர்வு எழுதும் பட்சத்தில் அப்பணியாளர்கள் மட்டும் நுழைவுச்சீட்டினை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும் .
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..