e- services in school education department 




“பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டமாக மின்னணு சேவைகள்"  e- services in school education department என்ற தலைப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது 

அத்திட்டதின் படி பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண்பட்டியல் நகல், புலப்பெயர்வு enosrlstp (Migration Certificate), இணைச்  சான்றிதழ் (Equivalence Certificate), தமிழ் வழியில் கல்விபயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு வகையானச் சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.

இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு காலவிரையம் மற்றும் பணவிரையம் ஏற்படுவதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறத.

 அதனை குறைக்கும் வகையில்   23 விதமான சான்றுகள் அனைத்தும் பொது மக்கள் மற்றும் மாணவர்கள், அவர்தம் இல்லத்திற்கு அருகிலுள்ள அரசு இ- சேவை மையங்களின் வாயிலாகவிண்ணப்பித்து காலவிரயமின்றி பெற்றுக் கொள்ளவும் எனவும் மேலும் வருங்காலங்களில் புதியதாக கண்டறியப்படும் சேவைகளையும் அரசு இ- சேவை  வழங்க திட்டமிடபட்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.


e- services in school education department Go No 4 Date 21.01.2022


What are the e service given in school education department / What are the e service available  in school education department 

23 வகையான சேவைகள்

1. 1 முதல் 12-ஆம் வகுப்பிற்கான கல்வி இணைச் சான்று  பிற பள்ளிக் கல்வி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பயின்றமைக்கான கல்வி இணைச்சான்றிதழ் ஆணையரகம்   (Equivalence Certificate).(Other States and Countries). -பள்ளிகல்வி ஆணையரகம் 

2. தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் ,பிற மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate). - சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்  

3 பிற மாநிலத்தில் 10,12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate).  - சார்ந்த மாவட்டக் கல்வி  அலுவலர். 

4, திறந்தவெளிப் பள்ளியில் படித்ததற்கான  State Institute of Open School  மாநிலக் கல்வியியல் 10-ஆம் வகுப்பு முடித்தமைக்கான ஆராய்ச்சி மற்றும் உண்மைத் தன்மைச் சான்று 1983.1984 முதல் 2001-2002.(Genuiness of Open Schools in 10" Std). –மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் .

5. உண்மைத் தன்மைச் சான்றிதழ் (Genuiness Certificate) 8,10, 11, 12 & DELEd, (Diploma in Elementary Education) (தொடக்கக்  கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு) வகுப்புகளுக்கு  -சார்ந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி  இயக்குநர்

6. தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று   (pSTM-persons Studied in Tamil Medium).  பள்ளியில் நேரடியாக பயின்ற  மாணவர்களுக்கு  - சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்

.7. தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று   (pSTM-persons Studied in Tamil Medium).  தனித் தேர்வர்களுக்கு  - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

8. D.ELEd., (Diploma in Elementary Education), தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று (PSTM Persons Studied in Tamil Medium). --(DIET) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

9. இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் - 8, 10, 11, 12 & DELEd. (Diploma in Elementary Education) தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  Certified Copy of Mark List (CCM) - 8, 10, 11,12 & D.ELEd. (Diploma in Elementary Education),  தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

11. மதிப்பெண் சான்றிதழ்  திருத்தம் Certified Copy of Mark List (CCM) - 8, 10, 11,12 & D.ELEd. (Diploma in Elementary Education),  தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

12.)  10 & 12-ஆம் வகுப்பிற்கான புலப் பெயர்வு சான்றிதழ் (Migration  Certificate). - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

13. பிற வகுப்புகளுக்கான புலப்பெயர்வு சான்றிதழ்  -சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்

14. மதிப்பீட்டுச் சான்றிதழ் (Evaluation Certificate), D.ELEd., மாநிலக் கல்வியியல் (Diploma in Elementary Education), Other States. மற்ற ஆராய்ச்சி மற்றும் மாநிலங்களில் வழங்கப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பட்டயத் தேர்வு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் .

15. பள்ளி மாற்றுச் சான்றிதல் இரண்டாம் படி - தலைமை ஆசிரியர்

16. பள்ளிமாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ளுதல்-  பள்ளிக் கல்விஆணையரகம்

17. தொடக்கக் கல்வி மாவட்ட ஆசிரியர் ஆசிரியர் பட்டயத் தேர்வு) இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ்.  –மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET)

18. இரண்டாம்படி ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்று (Issuance of Duplicate Certificate for TET Paper -l a Il )- ஆசிரியர் தேர்வு வாரியம் 

19. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு 2 ஆண்டுகள்) ஆசிரியராகக் கூடிய மாணவர்களுக்கு பணி முன் பயிற்சி வழங்குதல் பயிற்சி நிறுவனம் மற்றும் 

20. உடற்கல்வியில் பட்டயப் படிப்பு - சுயநிதி நிறுவனங்களின் (2ஆண்டுகள்) ஆசிரியராகக் கூடிய மாணவ ஆசிரியர்களுக்கு பணி முன் பயிற்சி வழங்குதல் மற்றும் மாற்றுச் சான்றிதழ்  வழங்குதல்- –மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET)

21. விளையாட்டு முன்னுரிமை சான்று – முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் 

22, தனித் தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தல் –தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் செயல்படும் சேவை மையங்கள் 

23. நன்னடத்தை சான்று (Conduct Certificate)  -சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் 


மேற்கண்ட 23 வகையான சான்றிதழ்கள் இ- சேவை வழியாக விண்ணப்பித்து அதற்கான சான்றிதழை பெற்றுகொள்ளலாம் .