NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) -2021-22
8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் திட்டத்தின் கீழ் படிப்பு உதவி தொகைக்கான வட்டார அளவில் தேர்வு 05.03.2022 அன்று நடை பெற உள்ளது .
அதற்கான விண்ணப்பம் 12.1.2022 முதல் 27.01.20212வரை தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் விண்ணப்பம் பெற்று அல்லது இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேர்வுக்கு மாணவர்கள் பெயர் பதிவு செய்துகொள்ளாலாம்.
தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலமாக 24.01.2022 பிற்பகல் முதல் 05.02.2022 வரை பதிவேற்றம் செய்யலாம்
மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:
●மாணவர் பெயர், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் Emis இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்கவேண்டும்.
●மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைப்பேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (OTP) விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைப்பேசி எண்ணை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும்.
NMMS-2022 UPLOADING INSTRUCTIONSS Pdf
Procedure for paying online fees through Karuvoolam website by public Pdf
NMMS-REGISTRATION 2022 And Pull data From Emis
NMMS முக்கியமான நாட்கள் :
●இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் : 12.01.2022 -27.01.2022
●தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் - 24.01.2022 பிற்பகல் முதல் 05.02.2022 வரை
●Hall Ticket Published Date :25.02.2022
■தேர்வு நாள் .05.03.2022
NMMS DGE Notification -2021-22 Pdf
NMMS Application Form -2021-22 Pdf
Previous Year Question Paper And Answer Key
NMMS Study material Collection
NMMS தேர்வு குறித்த விபரங்கள்
1. தகுதி
1. அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. உதவித் தொகை:
தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 (+2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்.
3. NMMS விண்ணப்பிக்கும் முறை:
இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
4.தேர்வுக் கட்டணம்:
ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும்.
5.தேர்வு முறை:
இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
●பகுதி I– மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT)
●பகுதி II- படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test) (SAT)
6. பாடத்திட்டம்:
படிப்புதவித் தேர்வு பகுதி I மற்றும் IIனைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில்
கணிதம் 20,
அறிவியல் 35,
சமூக அறிவியல் 35
மொத்தம் 90 வினாக்கள் கேட்கப்படும்.
மனத்திறன் தேர்வைப் பொறுத்த மட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..