Priority Block For Transfer Counselling-2021-22

2021-22ஆம் ஆண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை ஒன்றியங்கள் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CSE Proceeding  And Priority Block  List 


கல்வித்துறையில்‌ உள்ள அரசு  உயர்‌,மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி அலகில்‌ உள்ள ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள ஆசிரியர்கள்‌
சார்பான நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களில்‌ ஒட்டுமொத்த ஒன்றியங்களில்‌ அதிக எண்ணிக்கையில்‌ காலிப்பணியிடம்‌ உள்ள ஒன்றியங்களிலிருந்து 10 விழுக்காடுகளுக்கு மிகாமல்‌ முன்னுரிமை ஒன்றியங்களாக தெரிவிக்க அறிவறுத்தப்பட்டு
கீழ்க்கண்டவாறு 40 ஒன்றியங்கள்‌ முன்னுரிமை ஒன்றியங்களாக அறிவிக்கப்படுகிறது.


●நாகப்பட்டினம்‌ மாவட்டம் -வேதாரண்யம்‌, கீழையூர்‌,

●திருவாரூர்‌ மாவட்டம்-திருத்துறைப்பூண்டி. முத்துப்பேட்டை

●கள்ளக்குறிச்சி மாவட்டம்- சங்கராபுரம்‌, திருக்கோயிலூர்‌, ரிஷிவந்தியம்‌.

●உளுந்தூர்பேட்டை மாவட்டம்- தியாகதுருகம்‌

●விழுப்புரம்‌ மாவட்டம்  -காணை. மேல்மலையனூர்‌. முகையூர்‌, திருவெண்‌ ணெய்நல்லூர்‌,

●ராணிப்பேட்டை - மாவட்டம் -நெமிலி

●திருவண்ணாமலை மாவட்டம் - போலூர்‌, ஆரணி. செங்கம்‌, தண்டராம்பட்டு. ஜவ்வாதுமலை, வெம்பாக்கம்‌., கலசப்பாக்கம்‌,
செய்யாறு

●கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி,சூளகிரி, கெலமங்கலம் வேப்பணபள்ளி,பருகூர்‌.மத்தூர்‌ ,ஊத்தங்கரை

●தர்மபுரி மாவட்டம்- பென்னாகரம்‌. பாலக்கோடு,

●திருவள்ளுர் மாவட்டம் -ஆர்.கே பேட்டை கும்மிடிபூண்டி

●நீலகிரி மாவட்டம் - கூடலூர்‌

● ஈரோடுமாவட்டம் - தாளவாடி

●கடலூர்‌  மாவட்டம்-நல்லூர்‌

●கோயம்‌புத்தூர்‌ மாவட்டம் - வால்பாறை

●நாமக்கல்‌ மாவட்டம்  - கொல்லிமலை

●வேலூர்‌ மாவட்டம் - அணைக்கட்டு

●திருப்பத்தூர்‌ மாவட்டம்-கந்திலி

மேற்காண்‌ முன்னுரிமை ஒன்றியங்கள்‌ 2021.22ம்‌ கல்வியாண்டிற்கான தற்போது
நடைபெறும்‌ ஆசிரியர்‌ பொதுமாறுதல்‌ கலந்தாய்வுக்கு மட்டுமே பொருந்தும்‌ என அறிவிக்கப்படுகிறது.

மேலும்‌. அறிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒன்றியங்களுக்கு மாறுதல்‌ பெறும்‌ ஆசிரியர்கள்‌ 3 ஆண்டுகள்‌ அவ்வொன்றியத்தில்‌ பணிபுரிந்தால்‌ அவர்களுக்கு அடுத்துவரும்‌ பொதுமாறுதல்‌ கலந்தாய்வில்‌ (31 12.2024க்கு பிறகு) அரசாணை நிலை எண்‌ 176 விதி அமன்‌ கீழ்‌ முன்னுரிமை வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.