DEE - SGT Deployment Revised Instruction DATE:14.02.2022


தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


01.08.2021 தேதி படி பணியாளர்‌ நிர்ணயத்தின்‌ அடிப்படையில்‌ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உபரி என கண்டறியப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல்‌ கலந்தாய்வு 16.02.2022 அன்று முதல்‌ நடைபெற்ற  உள்ளது



1. 30.08.2019 மற்றும்‌ அதற்கு முந்தைய ஆண்டுகளில்‌ நடைபெற்ற பொது மாறுதல்‌ கலந்தாய்வுகளில்‌ உபரி என கண்டறியப்பட்டு பணியிடத்துடன்‌ ஒன்றியம்‌ விட்டு ஒன்றியம்‌ பணிநிரவல்‌ செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில்‌, தாய்‌ஒன்றியத்திலேயே அவர்களது முன்னுரிமைப்‌ பேணப்படும்‌ இடைநிலை ஆசிரியர்களுக்கு முதலில்‌ கலந்தாய்வு நடத்திட வேண்டும்‌.

🔹இவர்களை தாய்‌ ஒன்றியத்தில்‌ உள்ள தகுதியான காலிப்‌ பணியிடங்களுக்கு மீள பணிபுரிய அனுமதிக்கும்‌ வகையில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

🔹முந்தைய ஆண்டுகளில்‌ பணிநிரவலில்‌ சென்றவர்களுக்கு, தாய்‌ ஒன்றியத்திலேயே தற்போதும்‌ முன்னுரிமை பராமரிக்கப்படுபவர்களுக்கு, தாய்‌ ஒன்றியத்தில்‌ உள்ள நிரப்பத்‌ தகுந்த காலிப்‌ பணியிடம்‌ இல்லாதபட்சத்தில்‌ அவர்கள்‌ பணிநிரவல்‌ செய்யப்பட்ட பணியிடத்தில்‌ தொடர்ந்து பணியுரிய வேண்டும்.

🔹முந்தைய ஆண்டுகளில்‌ பணிநிரவலில்‌ சென்றவர்களுக்கு தற்போது தாய்‌ ஒன்றியத்தில்‌ உள்ள நிரப்பத்‌ தகுந்த காலிப்‌ பணியிடத்தில்‌ மாறுதலில்‌ வர விருப்பம்‌ இல்லாத ஆசிரியர்களிடம்‌ எழுத்து மூலமாக தங்களின்‌ முன்னுரிமையை தாங்கள்‌ பணிபுரியும்‌ ஒன்றியத்தில்‌ ஒப்புதல்‌ கடிதம்‌ பெற்று பராமரித்து கோப்பில்‌ வைக்க வேண்டும்‌.