SMC And Parent Meeting conduct 20.03.2022
அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் கூட்டம் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை நடத்துதல் தொடர்பான அறிவுரைகள்.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய - விழிப்புணர்வை ஏற்படுதுவதற்காக 20.03.2022 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்படவேண்டும்.
இக்கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம்,பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் கலந்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 20.03.2022 ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு வரகேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்த கூட்டம் மட்டுமே அன்று நடைபெற வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை.
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் 19.03.2022 சனிக்கிழமையன்று தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..