Online Training For 9 -12 Std Teachers And HMs
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்கள், 9 முதல் 12 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்
Online Training to Teachers Date :11.03.2022
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்கள், 9 முதல் 12 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணிணி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, கலை ) என அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்காக காணொலிகள், செயல்பாடுகள் முதலியன உள்ளடக்கப்பட்டு 12 கட்டகங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டகங்களை ஆசிரியர்கள் TNTP இணையதளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி தலைப்பின் கீழ் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்களது EMIS Teacher Password - மூலமாக TNTP இணையத்தள வாயிலாக இப்பயிற்சியினை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இணையவழி பயிற்சியானது 14.03.2022 அன்று தொடங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு கட்டகமாக TNTPயில் பதிவேற்றம் செய்யப்படும். புதிதாக கட்டகம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் ஆசிரியர்களுக்கு EMIS மூலமாக தெரியப்படுத்தப்படும். ஆசிரியர்கள் இணையவழி பயிற்சியில் ஒரு கட்டகத்தை தங்கள் வசதிக்கேற்ற வகையில் தவறாமல் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.
ஒரு ஆசிரியர் அனைத்து கட்டகங்களையும் முடித்த பின்னர் இப்பயிற்சி மேற்கொண்டதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒரு கட்டகத்தில் உள்ள காணொலிகள், உரைவளங்கள் பலவிதமான செயல்பாடுகள் என அனைத்தையும் ஆசிரியர் 100% நிறைவு செய்ய வேண்டியது அவசியம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..