2021 - 2022ஆம்‌ கல்வியாண்டிற்கான 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்புகளுக்கு முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்‌ அடிப்படையில்‌ முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ திருப்புதல்‌ தேர்வுகள்‌ நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது, 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பிற்காண முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில்‌ முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ திருப்புதல்‌ தேர்விற்கு வழங்கப்பட்ட பாடப்பகுதிகளைத்‌ தவிர்த்து, மீதமுள்ள பாடப்பகுதிகளிலிருந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக்‌ கொண்டு பள்ளி அளவிலேயே வினாக்களைத்‌ தயாரித்து மாணவர்களுக்கு திருப்புதல்‌ பயிற்சியளிக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


11ஆம்‌ வகுப்பிற்கு முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்‌ அடிப்படையில்‌ முதல்‌ திருப்புதல்‌ தேர்வு நடைபெற்று வருகின்றது. இத்தேர்வு முடிந்தபின்பு, மீதமுள்ள பாடபகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக்‌ கொண்டு பள்ளி அளவிலேயே வினாக்களைத்‌ தயாரித்து மாணவர்களுக்குத்‌ திருப்புதல்‌ நடத்த வேண்டும்