SGT BT PG Temporarily Appointed Through SMC


அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ தேர்ச்சி சதவிதம்‌ கருதியும்‌ இடைநிலை ,பட்டதாரி மற்றும்‌ முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களில்‌ பள்ளி மேலாண்மை குழு மூலம்‌ தற்காலிக ஏற்படாக 1.7.2022 முதல்‌ இடைநிலை ,பட்டதாரி ,முதுகலை பட்டதாரி ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக்‌ நியமிக்க உத்தரவு

CoSE And DEE Proceeding For Appointment SGT ,BT And PG Through SMC


Vacancy Details 


Thanjavur District PG VACANCY AFTER COUNSELLING  -Download 

Thanjavur District BT SGT Vaccancy as on 01.06.2022 -Download 


தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி, நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரப்பப்படும்‌ வரை ஜீலை 2022 முதல்‌ ஏப்ரல்‌ 2023 முடிய 10 மாதங்களுக்கும்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ காலியாகவுள்ள 3188 முதுகலை ஆசிரியர்‌ பணியிடங்களை ஜிலை-2022 முதல்‌ பிப்ரவரி-2023 முடிய 8 மாதங்களுக்கு மட்டும்‌ தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின்‌ வாயிலாக அந்தந்த ஊர்களில்‌ பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும்‌ அருகாமையில்‌ உள்ள பகுதியில்‌ உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைமையாசிரியர்‌, உயர்‌/மேல்நிலைப்‌ பிரிவிற்கான உதவித்‌ தலைமையாசிரியர்‌ மற்றும்‌ மூத்த பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர்‌ ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு மூலமாக தற்காலிகமாக நிரப்பிக்‌ கொள்ள அனுமதிக்கப்படுகிறது.


இவ்வாறு தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின்‌ வாயிலாக நியமனம்‌ செய்யப்படும்‌ இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.7500/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.40,000/- முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.12,000/- விதம்‌ மதிப்பூதியம்‌ வழங்கப்படும்‌