15.07.2022 மற்றும் 16.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CoSE - CEOs Meeting Instruction In Pdf 


ஆகஸ்ட்‌ 2022 முதல்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வருகைப்‌ பதிவேட்டில்‌ பதிவு செய்ய வேண்டாம்‌. வருகைப்‌ பதிவை செயலி வாயிலாக பதிவு செய்தால்‌ மட்டும்‌ போதுமானது.

ஆசிரியர்கள்‌ விடுமுறை விண்ணப்பிப்பதை TNSED செயலியில்‌ மட்டும்‌ விண்ணபிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

அரசாணைகள்‌, அறிவுரைகள்‌, அறிவிப்புகள்‌ பள்ளி அளவில்‌ இருப்பு கோப்புகளில்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌.

தலைமை ஆசிரியர்கள்‌ ஏதேனும்‌ ஒரு வகுப்பிற்கு பாடம்‌ கற்பிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

பள்ளி தொடர்ந்து நடைபெற்று வரும்‌ போது பள்ளிக்கோ, குறிப்பிட்ட வகுப்பிற்கோ இடையில்‌ விடுமுறை அளிக்க கூடாது. கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சியரின்‌ அனுமதியின்றி விடுமுறை அளிக்கக்‌ கூடாது.

ஆசிரியர்கள்‌ தொடர்‌ விடுப்பில்‌ இருக்கும்‌ போது கற்பித்தல்‌/கற்றல்‌ தடைபடாமல்‌ இருக்க மாற்று ஆசிரியரோ அல்லது விடுமுறை முடிந்து வந்த ஆசிரியர்‌ தொடர்‌ சிறப்பு வகுப்புகள்‌ நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

சம்மந்தப்பட்ட இணை இயக்குநர்கள்‌ ஆணையின்றி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்‌ எவ்வித மாறுதலும்‌ வழங்கக்கூடாது.

அனைத்து வகை மன்றச்செயல்பாடுகளும்‌ தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்‌.

ஓவிய ஆசிரியர்களுக்கு வகுப்புகள்‌ ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும்‌ வேண்டும்‌.

ஒவ்வொரு மாதமும்‌ 3வது வாரம்‌ மன்றச்செயல்பாடுகளின்‌ போட்டிகள்‌ நடத்தப்பட வேண்டும்‌.