Guidelines For Temporary Teachers Appointment in School -PG ,BT,SGT

தற்காலிக ஆசிரியர் நியமனம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

தொடக்க நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 2022-23ம்‌ கல்வியாண்டில்‌ காலியாகவுள்ள இடைநிலை) பட்டதாரி / முதுகலை ஆசிரியர்‌ பணியிடங்களில்‌ தற்காலிக ஆசிரியர்‌ நியமனம்‌ சார்பாக பார்வை-ல்‌ கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால்‌  வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின்‌ அடிப்படையில்‌ திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள்‌

Revised Guidelines For Temporary Teachers Appointment in School cse Proceeding11.07.2022 

1) தற்காலிக ஆசிரியர்‌ நியமனம்‌ சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியர்‌ , பட்டதாரி ஆசிரியர்‌ பதவிக்கு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களையும்‌, முதுகலை ஆசிரியர்‌ பதவிக்கு, முதுகலை ஆசிரியர்‌ தெரிவுக்கான ஆசிரியர்தேர்வு வாரியம்‌ மூலம்‌ நடத்தப்பட்ட தேர்வுகளில்‌ பங்கேற்று சான்றிதழ்‌ சரிபார்ப்பில்‌ கலந்து கொண்டவர்களையும்‌ மட்டுமே தற்காலிக நியமனம்‌ செய்யத்தக்க வகையில்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலினைக்கு எடுத்துக்‌ கொள்ளப்படவேண்டும்‌.


2) தற்காலிக ஆசிரியர்‌ நியமனம்‌ சார்ந்து 01.07.2022 நாளிட்ட செயல்முறைகளில்‌ பத்தி எண்‌.3ல்‌ வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதிகளுடன்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வுகளில்‌ தேர்ச்சி பெற்றவர்களுள்‌ ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்‌ விண்ணப்பம்‌ செய்திருப்பின்‌ பத்தி 4ல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமையின்‌ அடிப்படையில்‌ நியமனம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்‌.





பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு    புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு--- பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்


Guidelines For Temporary Teachers Appointment in School -PG ,BT,SGT  CoSE Proceeding  Date:01.07.2022 -Download