PG TRB 2020-21 CV Shortlist  Published


தமிழ்‌ வழியில்‌ பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளம்‌ வழியாக 26.08.2022 முதல்‌ 30.08.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌ /, ஆவணங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்ட தமிழ்‌ வழியில்‌ பயின்றதற்கான சான்றிதழ்களின்‌ அடிப்படையில்‌ பணி நாடுநர்கள்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில்‌ குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

TRB Press News -28.08.2022

  The list of candidates short-listed for Certificate Verification in 1:2 ratio for the Following subjects is hereby released.

             1. Tamil  
             2. English
             3. Mathematics
             4. Physics
             5. Chemistry
             6. Botany
            7. Zoology
             8. Commerce
             9. Economics
             10. History
             11. Geography
             12. Political Science
             13. Home Science
             14. Bio-chemistry
             15. Indian Culture
             16. Physical Education
             17. Computer Science


சான்றிதழ்‌ சரிபார்ப்பு பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கான அழைப்புக்‌ கடிதம்‌, ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவம்‌ மற்றும்‌ பிற இணைப்பில்‌ கண்டுள்ள படிவங்கள்‌ ஆகியவை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ விரைவில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌. 

தங்களது அழைப்புக்‌ கடிதம்‌ , ஆளறிச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ பிற இணைப்பில்‌ கண்டுள்ள படிவங்கள்‌ ஆகியவை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக்‌ கடிதம்‌ பிற வழிகளில்‌ அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தாரர்கள்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு அழைப்புக்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து அசல்‌ சான்றிதழ்கள்‌, ஆதார்‌ ஆகியவற்றுடன்‌ அதனுடைய Self Attested copies wihmib S,ormhlé சான்றிதழ்‌ ஆகியவற்றினை சான்றிதழ்‌ சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது