NOC Certificate Guidelines For CoSE Instructions 

அமைச்சுப் பணியாளர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள துறை அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று கோருதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!!!

 NOC Certificate Guidelines For CoSE Instructions  Date :25.11.22 -Download 

1. முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ நியமனம்‌ அலகுக்குட்பட்ட பணியாளர்களுக்கு அவர்தம்‌ நிலையிலேயே போட்டித்‌ தேர்வு எழுத அனுமதியும்‌, தடையின்மைச்‌ சான்றும்‌ வழங்க பரிசீலனை செய்து முடிவெடுக்கலாம்‌.

2. உதவியாளர்கள்‌ மற்றும்‌ சுரூக்கெஜத்து தட்டச்சர்களுக்கு போட்டித்‌ தேர்வு எழுத அனுமதி கோரும்‌ விண்ணப்பங்களை ஆய்வு செய்து நியமன அலுவலரான இணை இயக்குநருக்கு (பணியாளர்‌ தொகுதி) அனைத்து விவரங்களுடன்‌ காலதாமதமின்றி இவ்வாணையரகத்திற்கு முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ மூலமாக மட்டுமே அனுப்பிட வேண்டும்‌ எனத்‌ தெரிவிக்கலாகிறது.


அனுப்ப வேண்டிய விவரங்கள்‌:


1.பணியாளர் பெயர், பிறந்த தேதி  பதவி  பணி புரியும் அலுவலத்தின் பெயர்

2. நியமன முறை, பணியில்‌ சேர்ந்த நாள்‌, அதன்‌ விவரம்‌ பணிபணியாளர் பெயர், பிறந்த தேதி பதவி பணி புரியும் அலுவலத்தின் பெயர்ப்பதிவேட்டில்‌ பதிவு செய்த பக்க எண்‌.


3. பணிவரன்முறை செய்த நாள்‌, பணிவரன்முறை ஆணை எண்‌, இவ்விவரம்‌ பதிவு செய்த பணிப்பதிவேட்டின்‌ பக்க எண்‌.

4. தகுதிகாண்‌ பருவத்தினர்‌  தகுதிகாண்‌ பருவம்‌ நிறைவு செய்த நாள்‌, தகுதிகாண்‌ பருவம்‌ முடித்த ஆணை எண்‌, இவ்விவரம்‌ பதிவு செய்த பணிப்பதிவேட்டின்‌ பக்க எண்‌.

5. விண்ணப்பிக்கும்‌ தேர்வின்‌ பெயர்‌, தேர்வுஆணையம்‌/ வாரிய விவரம்‌, அறிவிக்கை எண்‌. மற்றும்‌ நாள்

6. சம்மந்தப்பட்ட பணியாளர்‌ மீதான ஒழுங்கு நடவடிக்கை சார்ந்த விவரம்‌

7. சம்மந்தப்பட்ட பணியாளர்‌ மீதான புகார்‌ சார்ந்த விவரம்‌

8. சம்மந்தப்பட்ட பணியாளர்‌ அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்‌ தொகை சார்ந்த விவரம்‌

9. சம்மந்தப்பட்ட பணியாளர்களின்‌ விண்ணப்பம்‌.

10. தேர்வாணைய நுழைவுச்‌ சீட்டு / 1நகல்‌ (தடையின்மைச்‌ சான்று கோரும்‌விண்ணப்பங்களுக்கு)

11. சம்மந்தப்பட்ட மாவட்ட முதண்மைக்‌ கல்வி அலுவலர்களின்‌ பரிந்துரை.