Part Time Teacher Transfer Counseling 2022

2022-23 ஆம்‌ ஆண்டிற்கான பகுதி நேர பயிற்றநர்களின்‌ கலந்தாய்வு
முதற்‌ கட்டமாக பகுதி நேர ஓவிய ஆசிரியர்களுக்கு 07.12.2022அன்று நடத்தப்படும்‌. 

Part Time Teacher Transfer Counseling 2022  Instruction  And Application Form In pdf  -Download 




இக்கலந்தாய்வினைத்‌ தொடர்ந்து இதர பிரிவுகளான. உடற்கல்வி 
பகுதி நேரப்‌ பயிற்றுநர்களுக்கும்‌ தொழிற்‌ கல்வி   பிரிவினருக்கும்‌ தனித்தனியே கலந்தாய்வு நடத்தப்படும்‌.

அந்தந்த மாவட்டத்திற்குள்ளாகவும்‌ அதனைத்‌ தொடர்ந்து மாவட்டம்‌ விட்டு மாவட்டத்திற்கான மாறுதல்‌ கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்‌.

மாறுதல்‌ பெறும்‌ பகுதி நேரப்‌ பயிற்றுநர்கள்‌ பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன்‌ புதிய பணியிடத்தில்‌ சேர வேண்டும்‌. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ அதன்‌ தொகுப்பறிக்கையினை மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்‌.

பகுதி நேரப்‌ பயிற்றுநர்களின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ மாறுதல்‌ ஆணை பெறுவதால்‌ இவ்வாணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம்‌ செய்யவோ கோரும்‌ கோரிக்கைகள்‌ பரிசீலிக்க இயலாது.

இம்மாறுதல்‌ பெறும்‌ பகுதி நேரப்‌ பயிற்றுநர்கள்‌ விருப்பத்தின்மேல்‌ மேற்கொள்ளப்படுவதால்‌ மாறுதல்‌ பயணப்படிகள்‌ வழங்கப்படமாட்டாது.

மாறுதல்‌ கோரும்‌ பகுதி நேரப்‌ பயிற்றுநர்கள்‌ விண்ணப்பத்தினை சார்ந்த தலைமையாசிரியரிடம்‌. பூர்த்தி செய்து 30.11.2022-க்குள்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவு செய்ய வேண்டும் /

 பதிவு செய்த பிறகு ஒப்புதல்‌ நகலை தங்கள்‌ வசம்‌  வைத்துக்கொள்ள வேண்டும்‌. ஒரு நகலைத்‌ தலைமை ஆசிரியர்‌ சார்ந்த மாவட்டத்‌ திட்ட
அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌..