Vanavil Mandram Videos -வானவில் மன்றம்
Vanavel Mantram Inauguration Live-வானவில் மன்றம் தொடக்கவிழா நேரலை Click Here
- அனைத்து அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 28.11.2022 பிற்பகல் 2.00 மணிக்கு “வானவில் மன்றம்” துவக்கப்பட வேண்டும்.
- வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்
- உள்ளூர் அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் துவக்க விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும்
- துவக்கத்தின் அடையாளமாக வண்ணமயமான பலூன்களை காற்றில் பறக்கவிடலாம்.
- 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல் மற்றும் கணிதப் பரிசோதனைகளைச் செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ1200)- ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. (நிதி ஒதுக்கீட்டு விவரப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).
Vanavil Mandram -வானவில் மன்றம் மாநில திட்ட இயக்குநர் செயல்முறை -Download
Vanavil Mandram -Suggestive experiment Videos
அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களின் பணிகளும் பொறுப்புகளும்
ஆசிரியர்கள் தானே சோதனைகள் செய்து காட்டி, மாணவர்களையும் சோதனைகளை செய்ய ஆர்வமுட்ட வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும். (மாதிரி சோதனைகள் இணைக்கப்பட்டுள்ளது). குழந்தைகளை கேள்விகளைக் கேட்க ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கேட்கும் ஆர்வமுள்ள கேள்விகளுடன் பரிசோதனைகளின் ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
STEM கருத்தாளர்கள் பள்ளிக்கு வருகை புரியும் போது அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளை சய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.
கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பயிற்சி பட்டறை, பணியிடை பயிற்சிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
அறிவியல் நிறுவனங்களுக்கு களப் பயணம் ஏற்பாடு செய்யப்படும் போது மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..