Committee  For Equal Pay For Equal Work  EQUAL WORK  GO-25 JAN 30


பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம்‌ என்ற இடைநிலை ஆசிரியர்களின்‌ கோரிக்கைகள்‌ குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள்‌ அளிக்க குழு அமைத்தல்‌ ஆணை

Committee For Equal Pay For Equal Work EQUAL WORK GO-25 JAN 30 Download 


பள்ளிக்கல்வித்‌ துறையின்கீழ்‌ இயங்கும்‌ பள்ளிகளில்‌ 01.06.2009-க்கு பின்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியில்‌ நியமனம்‌ பெற்றவர்கள்‌ 01.06.2009-க்கு முன்‌  இடைநிலை ஆசிரியர்‌ பணியில்‌ நியமனம்‌ பெற்றவர்களுக்கு இணையான ஊதியம்‌ வேண்டி பேராசிரியர்‌ அன்பழகன்‌ வளாகத்தில்‌ 27.12.2022 முதல்‌ தொடர்‌ உண்ணாவிரத போராட்டத்தில்‌ ஈடுப்பட்டனர்‌.


இது தொடர்பான 01.01.2023 அரசு செய்தி வெளியீட்டின் படி  சம வேலைக்கு சம ஊதியம்‌ என்ற கோரிக்கை “தொடர்பாகவலியுறுத்தி போராடி வரும்‌ ஆசிரியர்களின்‌ கோரிக்கைகள்‌ குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர்‌. செலவினம்‌ அவர்களின்‌ தலைமையில்‌, பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது.