Kannavu Aasiriyar Contest 2023 | கனவு ஆசிரியர் போட்டி -2023


கனவு ஆசிரியர்‌ 2023-மறுத்தேர்வு

கனவு ஆசிரியர்‌ 2023-ல்‌ பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில்‌ தொழில்நுட்ப்ப கோளாறு காரணமாக முதல்‌ நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும்‌ மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயற்சி நிறுவனம்‌  18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல்‌ 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும்‌ தகவல்‌ அறிய http://exams.tnschools.gov.in/login என்ற இணையதளத்தில்‌ இந்த 8730 ஆசிரியர்கள்‌ மட்டும்‌ தங்களுடைய 8 இலக்க  பயனர்‌ எண்‌ மற்றும்‌ கடவுச்சொல்‌ உதவியுடன்‌ விவரங்களை அறியலாம்‌.

கனவு ஆசிரியர்‌ 2023-மறுத்தேர்வு Teachers  list in Pdf |  Download 


Kannavu Aasiriyar Contest Guidelines |கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள்

காலஅளவு மற்றும் செயல்படுத்தும் முறை

தேர்வின் காலஅளவு - 40 நிமிடங்கள்

இணையவழித் தேர்வு

தேர்வர்கள், தாங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் தேர்வை எழுதலாம்..


Kannavu Aasiriayr Exam Pattern, Syllabus, Model Question Reduced Pdf 2023 |Download 


அடிப்படைத் தேவைகள்

Kannavu Aasiriyar Contest  Basic Rules in Pdf


பயன்படுத்தும் கருவி : வெப்கேம் கொண்ட மேசைச்கணினி / மடிக்கணினி அல்லது முன்பக்கக் கேமராவைக் கொண்ட திறன்பேசியைப் (Android phone) பயன்படுத்தலாம். ஐபோனைப் பயன்படுத்தக் கூடாது.

இணைய வேகம் : குறைந்தபட்சம் 2 Mbps தேவை. (இணைய வேகம் மெதுவாக இருந்தால், தேர்வுகளை நிறைவு செய்ய அதிக நேரம் ஆகும்).

இணைய உலாவிகள் (Browsers) : மேசைக்கணினி / மடிக்கணினியில் தேர்வு எழுதினால், கூகிள் குரோம் / மைக்ரோ சாப்ட் எட்ஜ் / மொஸில்லாஎ பயர்பாக்ஸ் உலாவியின்(Browser) தற்போதைய பதிப்பு தேவைப்படுகிறது திறன்பேசியில் எடுத்தால், குரோம் உலாவி (Browser) தேவை. தேர்வு நேரம் முழுவதும் வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் இயக்கப்படவேண்டும்.

சுற்றியுள்ள சூழல் : தேர்வு நடக்கும் உங்கள் அறையில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும்; சிறு சிறு தொந்தரவுகளைத் தவிர்க்க நீங்கள் தனி அறையில் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க நாள்கள்

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்- மார்ச்8, 2023

விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் - மார்ச்18, 2023

தேர்வு நடைபெறும் நாள் - ஏப்ரல்1, 2023

தேர்வு சார்ந்த ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள், தேர்வு நாளின் 48 மணிநேரத்திற்கு முன்பு பகிரப்படும்.

பாடத்திட்டம்:

தலைமைப் பண்புகள்

திறனாய்வுப் பார்வை

குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறன்

மொழி ஆளுமைக்கான தகவல்தொடர்ப்புத் திறன்