How To Apply 12Th Supplementary Public Exam 2023
ஜூன்,ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வுகளுக்கு, மார்ச்,ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்
How To Apply 12Th Supplementary Public Exam 2023 DGE Press News - Download
பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
மார்ச்,ஏப்ரல்2023 மேல்நிலை முதலாம் ஆண்டு (1 ARREAR) 7 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 11.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 ( புதன்கிழமை ) வரையிலான நாட்களில் (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
12Th Supplementary Public Exam Timetable 2023
11Th Supplementary Public Exam Timetable 2023
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச்,ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு (1 ARREAR) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 11.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 ( புதன்கிழமை ) வரையிலான நாட்களில் (14.05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
கடந்தாண்டுகளில் மேல்நிலை முதலாமாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது, தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அனுமதித் திட்டம்
11.05.2023 ( வியாழக்கிழமை) முதல் 17.05.2023 (புதன்கிழமை ) வரையிலான நாட்களில் ஜூன்,ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் . 18.05.2023 (வியாழக்கிழமை) முதல் 20.05.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000
தேர்வுக் கட்டணம்
1. ஏற்கனவே மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்றபாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில்தேர்வெழுதும்தேர்வர்கள்
- ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ.50
- இதரக் கட்டணமாக ரூ35ம்
- மொத்தம் ரூ.85
ஆன்-லைன் பதிவுக் கட்டணம் -ரூ.70
2.மேல்நிலை இரண்டாமாண்டுதேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள்
- தேர்வுக் கட்டணம் ரூ.150
- இதரக் கட்டணம் ரூ.35
- மொத்தம் ரூ.185
ஆன்-லைன் பதிவுக் கட்டணம் -ரூ.70
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..