Junior Assistant Timing For Schools Time


    பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ அமைச்சுப்‌ பணியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 10.00 மணி முதல்‌ 5.45 மணி வரை உள்ளதால்‌ பள்ளி வருகைப்‌ பதிவேட்டை முடித்தல்‌, ஆசிரியர்களின்‌ விடுப்புகளை குறித்தல்‌, பிற அலுவலகப்‌ பணிகளை மேற்கொள்வதில்‌ நிருவாக தொய்வு ஏற்படுவதாக தலைமை ஆசிரியர்கள்‌, முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌ தெரிவித்துள்ளனர்‌.


Junior Assistant Timing For Schools Time CoSE Proceeding - Download 


    பள்ளியின்‌ அலுவலக பணிகளை மேற்கொள்ளவும்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ வேலை நேரம்‌ ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம்‌ மற்றும்‌ தேவை எழுகிறது. மேலும்‌, அரசுப்‌ பள்ளிகளின்‌ நிருவாக மேம்பாட்டிற்கு ஆசிரியரல்லாத அமைச்சுப்‌ பணியாளர்களின்‌ பங்களிப்பு இன்றியமையாதது. எனவே, அரசுப்‌ பள்ளிகளின்‌ நிருவாகத்தை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக நிருவாக நலன்‌ கருதி, அமைச்சுப்‌ பணியில்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌.


     ஆசிரியரல்லாத பணியாளர்களான உதவியாளர்‌/இளநிலை உதவியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 9.00 மணி முதல்‌ 4.45 மணி வரை மாற்றியமைத்து ஆணையியபப்படுகிறது. மேலும்‌, கோடை விடுமுறை மற்றும்‌ பள்ளி விடுமுறைக்‌ காலங்களில்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ வேலை நேரமானது காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை அமையும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.