How To Get TNTET Duplicate Certificate In TRB 


How To Get TNTET Duplicate Certificate In TRB ,How To Get TNTET Paper 1 Duplicate Certificate, How To Get TNTET Paper 2 Duplicate Certificate,

கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.




ஆசிரியர்‌ தகுதி தேர்வு 2012, 2013, 2017 மற்றும்‌ 2019 ஆண்டிற்கான ஆசிரியர்‌ தகுதி தேர்வு தாள்‌1 ,2 சான்றிதழ்களின்‌ மறுபிரதி இவ்வாரியம்‌. வாயிலாக வழங்கப்பட்டுவருகிறது.

 மேற்படி சான்றிதழ்கள்‌ சார்ந்த தேர்வர்களுக்கு இணையதளத்தின்‌ eSevai வழியாக வழங்குவதற்கு இவ்வாரிய தலைவர்‌ அவர்களின்‌ அனுமதியிற்கிணங்க ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2012. 2013 , 2017 மற்றும்‌ 2019 ஆண்டிற்கான தாள்‌ 1 மற்றும் 2ஆகியவற்றிக்கான மறுபிரதி. சான்றிதழ்கள்‌ இணையதளத்தின்‌ வழியாக வழங்க இருப்பதால்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ வழியாக ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும்‌ மறுபிரதி கோரும்‌ விண்ணப்பங்களை இனி வருங்காலங்களில்‌ 15.05.2023 முதல்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம்‌.


மேற்படி மறுபிரதி சான்றிதழ்கள்‌ பெறுவதற்கு eSevai மையத்தை அனுகும்படியும்‌, விண்ணப்பதாரர்களிடம்‌ மறுபிரதி கட்டணத்‌ தொகை ரூ.100). (ஆசிரியர்‌ தேர்வு வாரிய ன வங்கி கணக்கு) மற்றும்‌ eSevai நிறுவனத்திற்கான சேவைக்‌ கட்டணத்‌ தொகை ரூ.60- சேர்த்து மொத்தத்‌ தொகை ரூ.160 யை மையத்தில்‌ செலுத்தி மறுபிரதி சாண்றிதழ்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ படி விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தும்படி சம்பந்தப்பட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.