Career Guidance  Leave  Proceeding 


நான்‌ முதல்வன்‌ - பள்ளியளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையம்‌ மேல்நிலைப்பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌ பள்ளிகளுக்கு வருகை தந்த நாள்களுக்கு ஆறு நாள்களுக்கு மிகாமல்‌ ஈடு செய்யும்‌ விடுப்பு வழங்குதல்‌ சார்ந்து.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌

Career Guidance Leave Proceeding Date 20.09.23 -Download 

அனைத்து மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ உயர்கல்வி பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள்‌, 08.05.2023 முதல்‌ குறைந்தது 2 பேர்‌ சுழற்சி முறையில்‌ பள்ளிக்கு வருகை தர வேண்டுமென்றும்‌ , அவ்வாறு விடுமுறை நாள்களில்‌ பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவர்களின்‌ உயர்கல்விக்கு உதவும்‌ அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும்‌ அவர்கள்‌ பணிபுரிந்த நாள்களுக்கு ஈடு செய்யும்‌ விடுப்பு வழங்கப்படும்‌ என தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின்‌ செயல்முறையில்‌ தெரிவிக்கப்பட்டூள்ளது.

அதன் படி முதுகலை ஆசிரியர்களுக்கும்‌, அவர்கள்‌ கோடை விடுமுறையில்‌ பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும்‌, அதிகபட்சமாக ஆறு நாள்களுக்கு மட்டும்‌ ஈடு செய்யும்‌ விடுப்பு அணுமதிக்கப்படுகிறது. மேலும்‌ அவ்விடுப்பினை மொத்தமாக எடுக்காமல்‌ அவ்வப்போது ஒரு நாள்‌ விதம்‌, விதிகளின்படி 6 மாத கால அவகாசத்திற்குள்‌ எடுக்க வேண்டுமென்றும்‌ இது சார்ந்த ஈடுசெய்‌ விடுப்பு ஏற்கனவே துய்க்கப்பட்டிருந்தால்‌ அவ்விடுப்பு போக மீதமுள்ள நாள்களுக்கு மட்டும்‌ விடுப்பு வழங்குமாறும்‌ அனைத்து மேல்நிலைப்பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கலவி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.