Half yearly Exam Postponed To Dec 13
மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு
நாளை மறுதினத்திற்குள் 4 மாவட்டங்களிலும் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன். கருதி. தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04 12.2023 முதல் 09. 12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும். நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள். நோட்டுப் புத்தகங்கள். சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற. பொருட்களை வழங்க நாளை திங்கள்கிழமை-11 12 2023 மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து. செவ்வாய்க்கிழமை -12 12 2023 அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம்.
உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12 .2023)
அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்.
உத்தவிட்டுள்ளார்கள்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..