பள்ளித்‌ தலைமையாசிரியருக்கான அறிஞர்‌ அண்ணா தலைமைத்துவ விருது


அரசு தொடக்க /நடுநிலை /உயர்நிலை மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான சிறந்த பள்ளித்‌ தலைமையாசிரியருக்கான அறிஞர்‌ அண்ணா தலைமைத்துவ விருது பெறும்‌ ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின்‌ அடிப்படையில்‌ மாநிலத்‌ தேர்வுக்‌ குழுவால்‌ தெரிவு செய்யப்பட்டுள்ளனர்‌. அவ்வாறு தெரிவு செய்யபட்டோர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

பள்ளித்‌ தலைமையாசிரியருக்கான அறிஞர்‌ அண்ணா தலைமைத்துவ விருதுபெயர் பட்டியல் Pdf - Download 

 அதன்படி அறிஞர்‌ அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும்‌ விழா மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ திருச்சி மத்திய பேருந்து நிலையம்‌ அருகிலுள்ள கலையரங்கத்தில்‌ எதிர்வரும்‌ 06.03.2024 அன்று நடைபெற உள்ளது.


விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும்‌ ஊக்கத்‌ தொகை தலா ரூ.10 இலட்சம்‌ மற்றும்‌ அப்பள்ளி தலைமையாசிரறிருக்கு பாராட்டுச்‌ சான்றிதழும்‌, கேடயமும்‌ வழங்கப்படவுள்ளது.