NMMS Exam 2025-26 Notification


 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் திட்டத்தின் கீழ் படிப்பு உதவி தொகைக்கான வட்டார அளவில் தேர்வு 10.01.2026 அன்று நடை பெற உள்ளது . 


அதற்கான விண்ணப்பம் 12.12.2025 முதல் 20.12.2025 வரை தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் விண்ணப்பம் பெற்று அல்லது இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேர்வுக்கு மாணவர்கள் பெயர் பதிவு செய்துகொள்ளாலாம்.

NMMSS ELIGIBILITY CRITERIA, SYLLABUS AND METHOD OF SELECTION -Download 

NMMS DGE Notification -2025-26 -Download 

NMMS press News- Downlod 

NMMS Application Form -2025-26Pdf -Download 

NMMS தேர்வு குறித்த விபரங்கள் 

1. தகுதி

 அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. உதவித் தொகை:

    தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 (+2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்.

3. NMMS விண்ணப்பிக்கும் முறை:

     இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

4.தேர்வுக் கட்டணம்:

     ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும்.

5.தேர்வு முறை:

இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.

 பகுதி I– மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT)

பகுதி II- படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test) (SAT)

6. பாடத்திட்டம்:

  பகுதி II- படிப்பறிவுத் தேர்வு

படிப்பறிவுத் தேர்வு பகுதி IIனைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில்

கணிதம் 20,

அறிவியல் 35,

சமூக அறிவியல் 35

மொத்தம் 90 வினாக்கள் கேட்கப்படும்.

 பகுதி I– மனத்திறன் தேர்வு 

    மனத்திறன் தேர்வைப் பொறுத்த மட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்