டெல்லி : நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த முழுமையாகத் தடை விதிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடையடைப்பு அல்லது போராட்டம் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.மேலும் அமைதி வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்று இணையத்தில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.