டெல்லி: இந்த ஆண்டு நீட் தேர்வு 150 நகரங்களில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 107 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 43 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். தமிழகத்தில் புதிதாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.