மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் ஒன்றினை 2000ஆம் ஆண்டு வெளியிட்டது. கணினிகளில் இணையம் மூலம் இதனைப் பயன்படுத்தி ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்துகொள்ளும் வசதிஇது.
மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷனில் தற்போது தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியிலிருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியின் மூலம் தற்போது தமிழ் உள்பட உலகின் 60 மொழிகளை மொழிபெயர்க்க முடியும் என்ற தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்ளிகேஷன் தற்போது ஆன்ட்ராய்டு மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை உலகின் பல்வேறு இடங்களில் வாழும் கோடிக்கணக்கானோர் பேசிவருகின்றனர். புதிய அப்டேட் மூலம் பயனர்கள் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் கொண்டு தமிழ் மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
ஸ்மார்ட்போனில் இப்போது வரும் புதிய தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலையை மிகவும் எளிமையாக்குகிறது. இதுவரை நாம் ஒரு வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய கூகுள் டிரான்ஸ்லேட்டர் பயன்பாட்டை தான் அதிமாக பயன்படுத்தி இருக்கிறோம். மேலும் கூகுள் டிரான்ஸ்லேட்டர்-ல் பொதுவாக டெக்ஸ்ட் மட்டுமே வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போது வந்துள்ள ஒரு ஆப் வசதியில் நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்ற முடியும். மேலும் வருங்காலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வரும் அவை கண்டிப்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்-என்ற ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து
இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ஆப் வசதியை பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்-ஆப் பயன்பாட்டில் உங்களுக்கு தகுந்த மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும், அதன்பின்பு மிக எளிமையாக நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய முடியும்.