உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை என அழைக்கப்படும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது இந்தியா.
இன்று காலை ராஜஸ்தானின் பொக்ரான் என்ற பகுதியில் பிரமோஸ் ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது உலகிலேயே
மிக வேகமான க்ரூஸ் ஏவுகணையாகும் (world's fastest supersonic cruise missile). இந்த ஏவுகணை ஒலியை விட முன்று மடங்கு வேகமாகப் பயணித்து 290 கிமீ தூரத்திற்கு
சென்று இலக்கைத் தாக்கக் கூடியது. இதை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தியா
மற்றும் ரஷ்யாவில் உள்ள நதிகள் பிரம்மபுத்ரா மற்றும் மோஸ்க்வா ஆகியவற்றின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே
பிரமோஸ் என்ற பெயர்.
உலகிலேயே கடற்படை, விமானப் படை, தரைப்படை ஆகிய மூன்றுமே சூப்பர்சானிக் ஏவுகணை (ப்ரமோஸ்) கொண்ட ஒரே நாடு
இந்தியா. இந்த ஏவுகணை உருவாக்கும் முயற்சியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த விஞ்ஞானிகளுக்கு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.