மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்பள்ளிகளில் விரைவில் கரும்பலகைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் பலகைகள் இடம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் முழு அளவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜவடேகர், கல்வியை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறினார். கரும்பலகைகள் டிஜிட்டல் பலகைகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லீ தமது பட்ஜெட் உரையில் உறுதியளித்ததை ஜவடேகர் நினைவுகூர்ந்தார்