சென்னை: கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அரசியல் பேச கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. மஞ்சுளா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர் பிறப்பித்து இருக்கும் உத்தரவில் ''சமீப காலமாக கல்லூரி விழா, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி சார்ந்த, இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசுவதாக தெரிய வந்துள்ளது. மாணவர்களிடம் இப்படி பேசுவது அவர்களின் படிப்பை, ஆராய்ச்சியை பாதிக்கும். இது அவர்களின் கல்லூரிக்கு இடையூறாக அமையும்'' என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதனால் தற்போது கல்லூரி விழாக்களுக்கு புதிய விதிகளை கல்லூரி கல்வி இயக்குனர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி இனி கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் அரசியல் பேச கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. மஞ்சுளா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் விருந்தினர்கள் அரசியல் பேசும் விழாவிற்கு கல்லூரி இனி அனுமதி அளிக்க கூடாது என்றும், விருந்தினர்கள் அரசியல் பேசுவது தெரிந்தால் நடவடிக்கை என்று இயக்குனர். ஜெ. மஞ்சுளா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
எல்லா கல்லூரிகளும் உடனடியாக இதை பின்பற்ற வேண்டும் என்றுள்ளார். முக்கியமாக அரசு உதவு பெறும்/ சுயஉதவி கல்லூரிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று கூறியுள்ளார்.