வாஷிங்டன் : இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்சை கவுரவிக்கும் பொருட்டு, அவரது குரலை, விண்வெளியில் அசரீரியாக ஒலிக்கச் செயவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானியாக விளங்கியவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். இவரது கொள்கைகள், கருத்துக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படாதவையாக இருந்தாலும், யாராலும் மறுக்கமுடியாதவை. அரியவகை நியூரான் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஹாக்கின்ஸ், பல்லாண்டு காலமாக சிறப்பு சிகிச்சையிலேயே இருந்து வந்துள்ளார். ஹாக்கின்ஸ், தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி மரணமடைந்தார். இவரது உடல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில், சார்லஸ் டார்வின் மற்றும் ஐசக் நியூட்டன் கல்லறைகளுக்கு நடுவில் புதைக்கப்பட்டுள்ளது. மண்ணில் பூத உடல்; விண்ணில் குரல் : கருந்துளை குறித்த ஹாக்கின்ஸின் ஆராய்ச்சி, பல்வேறு விஞ்ஞானிகளையே புருவம் உயரவைத்தது. ஹாக்கின்சின் உடல், இம்மண்ணில் புதைக்கப்பட்டிருந்தாலும், கருந்துளை ஆராய்ச்சிக்காக, அவரது குரலை, கருந்துளையில் ஒலிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஹாக்கின்ஸின் குரல், விண்ணிற்கு அலைக்கற்றை வடிவில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..