சென்னை: மத்திய ஆசிரியா தகுதித் தோவுக்கு (சிடிஇடி) விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னா அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஒத்திவைப்பு ஏன்?: தமிழ் உள்பட 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியா தகுதித் தோவை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடாந்து, பணிகளை மேற்கொள்ள வசதியாக விண்ணப்பிக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ இன்று வெளியிட்ட அறிவிப்பு:
சிடிஇடி தோவுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என முன்னா அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.