சென்னை: மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொல்லியல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறையில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுளளார்.