தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.



whats app group1
whats app group 2