பில் கேட்ஸ் பிறந்த தினம்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் அக்டோபர் 28,1955-ல் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் ஹெச்.கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது தந்தை வழக்கறிஞகராகவும், தாயார் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க இயக்குநர் வாரியத்தில் பணியாற்றினார்.
1974-ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனம் புதிய மைக்ரோ புரோஸசரை அறிமுகம் செய்தது. அதன் புரோகிராமிங் பணிக்கு பில்கேட்ஸ் மற்றும் அவரது நண்பர் பாலின் உதவியை நாடியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பில்கேட்ஸ் FORTRAN, COBOL,PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்று BASIC புரோகிராம் எழுதத் தொடங்கினர். இதோ இன்று உலகமே போற்றும் வகையில் உயர்ந்து நிற்கின்றார் என்றால் மிகையாகாது.
இதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான "தி ரோடு அஹெட்" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.