நிலையான அறிவியல் புனைவான வார்ம்ஹோல் எனப்படும் பரவெளி அனுமான இணைப்பு, அடிக்கடி பால்வெளி அண்டத்தில் உள்ள பல்வேறு உலகங்களை இணைக்கும் ஒளிச்சுழல் வாயில்களாக சித்திரக்கப்டுகிறது. ஆனால் உண்மையில் அவை எப்படியிருக்கும் என்று யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நமக்கு ஏமாற்றமளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


வார்ம்ஹோல் போன்ற அனுமானமான கட்டமைப்புகளின் அம்சங்களை மதிப்பீடு செய்யும் வழியே கண்டறிந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளர் ஒருவர், நமக்கும் ஒளியை பற்றியும், விண்வெளியை பற்றியும் என்ன தெரியுமோ அதிலிருந்து பின்னோக்கி சென்று ஆராய்ந்துவருகிறார்.


நாணயத்தின் இரு பக்கங்களை போல இருக்கும் ப்ளேக்ஹோல் மற்றும் வார்ம்ஹோல் தத்துவார்த்தங்கள், நமது இயற்பியல் அனுபவத்தையே கேள்விகுறியாக்கிவிடும். அதனால் நேரிடையாக இல்லாமல் அவையிரண்டும் ஆதிக்கம் செலுத்தும் பொருட்களை ஆராய்வதன் மூலம் சிறப்பாக செயல்படமுடியும்.


ரஷ்யாவின் பீபிள்ஸ் ப்ரெண்ட்சிப் பல்கலைகழகத்தை சேர்ந்த ரோமன் கோனப்ல்யா என்பவர், விண்வெளிநேரத்தின் சிற்றலை வடிவியலை வைத்து கற்பனைக்கு எட்டாத கட்டமைப்புகளின் அம்சங்களை விவரிக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளார். ஆனால் அதை கண்டறிவது அவ்வளவு சுலபமாக இருக்காது.


"வார்ம்ஹோலின் அதிக அதிர்வலை குசிநார்மல் மோட் தெரிந்தவர்கள், கோளமான சமசீரற்ற பயணிக்ககூடிய வார்ம்ஹோலின் வடிவத்தை எப்படி மறுகட்டமைப்பு செய்ய முடியும் என்பதை நம்மால் இங்கு காண்பிக்கமுடியும்" என்கிறார் ரோமன்.


இவரது ஆய்வின் சில தகவல்கள் துவக்கநிலையில் உள்ள வார்ம்ஹோல் ஆர்வலர்களுக்கானது இல்லை. அவரின் ஆய்வு என்ன என்பதை இங்கு சுருக்கமாக காணலாம்.


ஐன்ஸ்டீனின் ஜெனரல் ரிலேடிவிட்டி மற்றும் மேக்ஸ்வெல்லின் எலெக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேசன் சமன்பாடுகளின் படி, ஒளியின் வேகம் பற்றிய தகவல்களும், நேரம் மற்றும் இடம் பற்றிய செயல்பாடுகளும் தெரிந்துகொள்ளமுடியும்.


20 ஆண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டீன் அவர்கள், மற்றொரு இயற்பியலாளரான நாதன் ரோசன் என்பவருடன் இணைந்து ஆராய்ந்து, ப்ளேக்ஹோல் வழியாக செல்லும் தகவல்கள் எங்காவது ஒரு இடத்தில் அல்லது ஒயிட்ஹோல் வழியாக ஸ்பேஸ்டைமில் வெளிவரும் என்றனர். ஆனால் இதுவரை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு பின் அவை எப்படி செயல்படும் என்பது நமக்கு தெரியாது. அதாவது கருந்துளையின் உள்ளே செல்லும் போது நிறை, தொலவை போன்றவை எப்படி இருக்கும் என்பது தெரியாது.


அலைகளுக்கு இடையே உள்ள இடத்தில் மறைந்ததுள்ள ஆற்றலின் முலம் ப்ளேக் மற்றும் ஒயிட்ஹோல்களின் வடிவத்தை அறிய முடியும் என ரோமன் கண்டறிந்தார். எனவே உயர்அதிர்வலை குசிநார்மல் மோட்கள் ப்ளேக்ஹோலில் சுழலும் போது அவற்றை பற்றி அறிந்துகொள்ள முடியும்.


இதன்காரணமாக, அவர் குவாண்டம் மெக்கானிக்ஸ் பயன்படுத்தி எப்படி, ப்ளேக்ஹோலில் சுற்றியுள்ள மின்காந்தபகுதியில் ஒளிஅலைகள் விரிவடைகின்றன என்பதல கண்டறியலாம். அந்த முடிவுகளின் அடிப்படையில் ப்ளேக்ஹோலின் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ளமுடியும்


whats app group1


whats app group 2