தமிழகத்தில் பொங்கல் வரை வடகிழக்கு பருவமழை நீடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை மைய ஆய்வாளா் தொிவித்துள்ளாா்.
தமிழகத்தின் தஞ்சை, திருவாரூா், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு கரையை கடந்துள்ளது. இந்நிலையில் தனியாா் வானிலை மைய ஆய்வாளா் செல்வகுமாா் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை (25ம் தேதி) முதல் 28ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை. எனவே புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், நவம்பா் 29ம் தேதி தொடங்கி டிசம்பா் 1ம் தேதி வரை விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழை வருகின்ற பொங்கல் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் பெங்கல் வரை தமிழகத்திற்கு 8 காற்றழுத்த தாழ்வு நிலை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இவற்றில் 2 புயலாக மாற வாய்ப்புள்ளது. ஒரு புயல் தென்தமிழகத்திற்கும், மற்றொரு புயல் வடதமிழகத்திற்கும் செல்ல வாய்ப்புள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.
Source தினகரன்