இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வரும் வியாழனன்று (நவ.29) ஒரே நேரத்தில் 30 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகின்றது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இஸ்ரோ நிறுவனம் வர்த்தக தளமாக இருப்பதால், குறைந்த விலையில் வெளிநாட்டு ராக்கெட்களையும் விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இம்முறையும் அமெரிக்கா போன்ற ராக்கெட்களையும் ஓரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கின்றது.
இஸ்ரோ:
இஸ்ரோ நிறுவனம் வரும் வியாழனன்று ஒரே நேரத்தில் 30 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. இதில் நானோ செயற்கைக்கோள்கள், சிறிய அளவிலான செயற்கைக்கோள்களும் அடங்கும். மொத்தம் 30 சாட்டிலைட்டுக்களில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவினுடையது. இவை அனைத்தும் PSLV C43 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை காலை 9.59 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.

30 செயற்கைகோள்:
சிறிய அளவிலான 30 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் சாட்டிலைட் ஆகும். (HyperSpectral Imaging Satelite ,HySIS). அதாவது நிறமாலை செயற்கைக்கோள்கள். பூமியில் இருந்து 623 கிமீ தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள்கள், பூமியை நிறமாலை மின்காந்தஅலை உதவியுடன் படம்பிடிக்கும்.

பயன்பாடுகள்:
இதன் மூலம் பூமியில் உள்ள பொருட்களை மிகதுல்லியமாக அதன் அளவு, பரிமாணம், தட்பவெப்பம் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். குறிப்பாக வேளாண்மை, காட்டுப்பகுதி, கடற்கரை பகுதி, நில வளம், நீர் வளம் இன்னும் பிற இயற்கை வளங்கள் குறித்த தகவல்களை தொலைத்தூரத்தில் இருந்து கொண்டே பெற முடியும்.

இஸ்ரோ தலைவர் சிவன்:
இத்தகைய செயற்கைகோள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கம்யூட்டர் சிப் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் சண்டீகரில் தயாரிக்கப்பட்டுள்ளது'.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


Whats App Group link