புதுக்கோட்டை,நவ26- புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை தேர்விற்கு நியமிக்கப்பட்ட முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தேர்வுப்பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:அரசு நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 2018-2019ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை தேர்வு வருகிற 01-12-2018(சனிக்கிழமை) அன்று நடைபெற இருக்கிறது.இத்தேர்வுக்கு புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 8தேர்வு மையங்களும்,அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6தேர்வு மையங்களும்,இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 6தேர்வு மையங்களும் ஆக மொத்தம் 20தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த தேர்வு மையங்களில் 4501 மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பள்ளித்தலைமையாசிரியர்கள் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து பள்ளி முத்திரை பதித்து தேர்வர்களுக்கு வழங்கப்படவேண்டும்.தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து தேர்வர்களுக்கும் பதிவெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யப்படவேண்டும்.தேர்விற்கான விடைத்தாட்களில் ஓஎம் ஆர் பெயர்,பதிவெண்,பிறந்த்தேதி,பாலினம் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் தேர்வுக்கு நியமனம் செய்யப்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வர்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாட்களை வழங்கும் முன் உரிய பதிவெண் கொண்ட தேர்வருக்குத்தான் வழங்கப்படுகிறதா என்பதை தேர்வரின் நுழைவுச்சீட்டு மற்றும் பெயர்பட்டியலை வைத்து நன்கு சரிபார்த்த பின்னரே தேர்வருக்கு வழங்கி கையொப்பமிட அறிவுறுத்தவேண்டும்.குறிப்பாக தேர்வெழுத வரும் தேர்வர்கள் கருப்பு மை பந்துமுனை பேனாவினை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியர்கள் தங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதும் இணைப்பு பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து தேர்வெழுதும் மாணவர்களின் நுழைவுச்சீட்டு பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யப்படவேண்டும்.நுழைவுச்சீட்டு பெறப்படாத மாணவர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளவேண்டும். இயக்குநர் அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் தேர்வினை சிறப்பாக நடத்திட தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன், இலுப்பூர் க.குணசேகரன்,அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம், தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் 4501 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை தேர்வினை எழுத உள்ளனர். முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.

Tags
CEO/DEO