புத்தாண்டு தினத்தையொட்டி டிச.31, ஜன.1 என இரண்டு நாள்களும் 24 மணி நேரமும் இடைவெளியின்றி தமிழகமெங்கும் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் சிறப்பு புத்தக விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், அறிவு பதிப்பகம், தாமரை பதிப்பகம், பாவை பதிப்பகம், நெஸ்லிங் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும்.
 கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, மொழியியல், வரலாறு, சுயசரிதை, நாட்டுப்புற இலக்கியம் ஆகியவை உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாசகர்களும், நூல்களை வாங்கி பயன்பெற வேண்டும் என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Whats App Group link