அரையாண்டு தேர்வுக்குப் பின், வரும் 22ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, ஆறு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு வரும் 10ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்தேர்வு, வரும் 17ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு விடுமுறை, 23ம் தேதி துவங்கி, ஜனவரி 1ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி, மீண்டும் திறக்கப்படும். இதற்கு பின், மூன்றாம் பருவ பாடத்திட்டம் துவங்கும் என, இணை இயக்குனர் குப்புசாமி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.