அலுவலக நேரத்துக்கு பின், அலுவலகத்துடன் தொடர்பின்றி இருப்பதற்கான உரிமை அளிக்கும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


"லோக்சபாவில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்., கட்சியின், எம்.பி.,யும், பவாரின் மகளுமான, சுப்ரியா சுலே, அலுவலக தொடர்பறு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், அலுவலக நேரத்துக்கு பின், ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் இருந்து வரும், தொலைபேசி அழைப்புகள், 'இ - மெயில்' மூலமான கேள்விகள் போன்றவற்றுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை.

இதன் மூலம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கப்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது.

இந்த மசோதா, 10 ஊழியர்களுக்கு அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.

 அத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர் நல கமிட்டியை உருவாக்க வேண்டும்.

மசோதா சட்டமானால், அலுவலக நேரத்துக்கு பின் வரும் தொலைபேசி அழைப்புகள், இ - மெயில் தகவல்கள் போன்றவற்றிற்கு பதில் அளிக்காத ஊழியர்களுக்கு எதிராக, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.

இது போன்ற சட்டம் இயற்றுவதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் முன்னணியில் உள்ளது.

கடந்த, 2017ல், பிரான்சில் இயற்றப்பட்ட சட்டப்படி, 50 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த சட்டம் பொருந்தும்.

மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலும், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது."

Whats App Group link