தமிழகத்தில் முதன்முறையாக, ஒசூர் அருகேயுள்ள அரசுப்பள்ளி ஒன்றில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மதிய உணவு திட்டம் தொடங்கி  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இதனால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து கல்வி விகிதம் அதிகரித்து வருகிறது.

 இந்தநிலையில், ஒசூரை அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மதிய உணவு திட்டத்தைப் போல், காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 திட்டத்தை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

 தொடர்ந்து சூளகிரி , தளி பகுதிகளில் உள்ள 70 அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 இந்த திட்டத்தின் மூலம் சுமார் எட்டாயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.